health tips - 2026

அப்பாச்சி தீர்வு: படர்தாமரை, நரம்புதளர்ச்சி, தீப்புண், வெள்ளை வெட்டை நோய், சொப்பனஸ்கலிதம்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

படர் தாமரை சரியாக…

வங்காயம். கந்தகம். நவச்சாரம் இவற்றை வகைக்கு 5 கிராம் அளவு டுத்து 30 கிராம் வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து காலை. தலை படர் தாமரையின் மீது தேய்த்து வர இரண்டு மூன்று ள்களிலேயே குணமாகும்.

நரம்புத் தளர்ச்சி சரியாக…

ஜடா மஞ்சரி வேரின் தூள் 5 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைத்து அந்த நீரில் ஓர் அவுன்ஸ் வீதம் மூன்று நாள்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

தீப்புண்ணுக்கு…

நெருப்புப் பட்டாலும், சுடு தண்ணீர் கொட்டினாலும் அந்த இடத்தில் கொப்புளம் கிளம்பி புண்ணாகி விடும். அந்த இடத்தின் தேன் பூசலாம். அல்லது வாழைப் பட்டையை பிழிந்து அதன் சாற்றைத் தடவலாம். கொப்புளம் கிளம்பிப் புண்ணாகாது.

சொப்பன ஸ்கலிதம் சரியாக…

துளசி வேரை உலர்த்தி இடித்துப் பொடி செய்து அந்தப் பொடியை வெற்றிலையில் வைத்து சாப்பிட்டு வர மூன்று நாள்களில் சொப்பன ஸ்கலிதம் நின்று விடும்.

வெள்ளை, வெட்டை நோய் சரியாக…

வெள்ளருகு இலைகளைக் கொண்டு வந்து மூன்று மிளகு சேர்த்து அரைத்து சுண்டைக்காயளவு பசும்பாலில் சாப்பிட்டு வர வெள்ளை. வெட்டை நோய் குணமாகும். குறைந்தபட்சம் மூன்று நாள்களாவது சாப்பிட வேண்டும். உணவில் புளி, கடுகு நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.