Dhinasari Home page

வங்கியில் ரூ45கோடி மோசடி..?

சற்றுமுன்

சென்னை துறைமுக பொறுப்புக் கழக நிதி ரூ. 45 கோடியை மோசடி செய்ததாக பி.வி.சுடலைமுத்து, எம்.விஜய்ஹெரால்டு, ராஜேஷ் சிங், சையது, ஜாகிர் உசேன், உள்ளிட்ட 11 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் ரூ. 100 கோடியை சென்னை துறைமுகம் டெபாசிட் செய்திருந்தது.டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 100 கோடியை பலர் கூட்டு சேர்ந்து மோசடி செய்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அமலாக்கப்பிரிவினர் 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ100 கோடியை பலர் கூட்டு சேர்ந்து மோசடி செய்திருப்பது குறித்து அமலாக்கத்துறை மேலும் விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.