ஆரோக்கிய சமையல்: வரகு இலை அடை!

Published:

varaku ilai adai - 2026

வரகு இலை அடை

தேவையானவை:

வரகு மாவு – 1 கப்
வெல்லம் – 200 கிராம்
நெய் – 2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 கப்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
வாழை இலை – 5 சதுரங்கள்
உப்பு – அரை டீஸ்பூன்

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் வடிவட்டி வைக்கவும். வாணலியில் நெய்விட்டு தேங்காய்த் துருவலைப் போடவும். நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதில் வெல்லத்தை ஊற்றவும். நன்கு கொதிக்கவிடவும். ஏலக்காய்த்தூள் போட்டு நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விட்டு கெட்டி பதம் வந்ததும் நெய்விட்டு பூர்ணமாக்கி இறக்கிவிட்டு ஆறவிடவும்

வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு பாத்திரத்தில் வரகு மாவை இட்டு அதில் நெய்விட்டு, கொதிக்கும் நீரை வேண்டிய அளவு ஊற்றி வேகமாகக் கிளறவும். மாவு இறுக்கமாக கொழுக்கட்டைப் பிடிக்கும் பதம் வந்ததும் நெய் தடவிக்கொண்டு, பந்து போல் பிடித்து வைக்கவும். வாழை இலையில் நெய் தடவி வரகு பந்தை வைத்து வட்டமாகத் தட்டிக் கொள்ளவும். அதன் நடுவில் தேங்காய் பூர்ணத்தை வைத்து இலையோடு சேர்த்து மடித்து வைத்துக்கொள்ளவும். இட்லிக் குக்கரில் 20 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க வாசமான வரகு இலை அடை ரெடி.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Related articles

Recent articles

spot_img