IMG 20220310 WA0004 - 2026

சபரிமலையில் தளர்வுகள்…ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவரும் தரிசனம்:

சற்றுமுன்

சபரிமலையில் தினசரி தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு இருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில மாதங்களாக தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. கடந்த மண்டல மகர விளக்கு காலங்களில் தினமும் 25000பக்தர்கள் அனுமதி க்கப்பட்டிருந்தனர்.

கொரோனா பரவல் தற்போது நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வரும் நிலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள அரசு தீர்மானித்து உள்ளது.
அதன்படி தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் என்ற கட்டுப்பாடு இன்று முதல் நீக்கப்பட்டு உள்ளது.ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது.வருகிற 19ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று சபரிமலை ஐயப்பனனுக்கு உற்சவபலிபூஜை சடங்குகள் நடைபெற்றது.

IMG 20220310 WA0004 - 2026
IMG 20220310 WA0005 - 2026
IMG 20220310 WA0006 - 2026
IMG 20220310 WA0007 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.