ஆரோக்கிய சமையல்: கம்பு தேன் லட்டு!

Published:

kambu ladu - 2026

கம்பு – தேன் லட்டு

தேவையானவை:

கம்பு மாவு – 1 கப்
கேழ்வரகு மாவு – கால் கப்
பொட்டுக்கடலை மாவு – கால் கப்
தேன் – முக்கால் கப்
ஏலப்பொடி – அரை டீஸ்பூன்
நெய் – கால் கப்
முந்திரி, திராட்சை – தலா 2 டீஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

கம்பு மாவு, கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு மூன்றையும் கலந்துகொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை சேர்த்து லேசாக வதங்கியதும் மாவையும் சேர்த்து வறுத்து இறக்கி, சில நிமிடங்கள் ஆறவிடவும். சூடு குறைவதற்குள் மேலும் சிறிது நெய் விட்டு கலந்து, தேனும் ஊற்றி மாவை உருண்டையாகப் பிடித்து வைக்கவும். ஆறவிட்டு டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால் ஒரு வாரம் வரை கெடாது. காலை நேரப் பசிக்கு மிகவும் ஏற்றது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img