son mom - 2026

தாயை கண்டுபிடிக்கும் குட்டி குழந்தை! குயூட் வீடியோ!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
son mom - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.

ஒரு குழந்தை தன் தாய் எங்கிருந்தாலும் உடனடியாக அவரை அடையாளம் கண்டுவிடுகிறது. ஆனால், தன் தாய் போல் பலர் அமர்ந்து, முகத்தையும் மூடிக்கொண்டிருந்தால், அக்குழந்தையால் தன் தாயை சரியாக கண்டுபிடிக்க முடியுமா? இப்படி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

இந்த வீடியோவில் சில பெண்கள் முக்காடு போட்டு அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அப்போது ஒரு குழந்தை வந்து இந்த பெண்களில் யார் தன் தாய் என்று குழம்பி பார்க்கிறது.

ஆனால் இறுதியில் குழந்தை தன் தாயை அடையாளம் கண்டு கொள்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், முதலில் ஒரு சிறு குழந்தை அறைக்குள் நுழைவதைக் காண முடிகின்றது. ஆனால் அங்குள்ள காட்சியைப் பார்த்து அது ஆச்சரியப்படுகிறது. ஏனென்றால் அறையில் பல பெண்கள் முக்காடு போட்டு ஒரே மாதிரியான புடவை அணிந்து அமர்ந்திருக்கிறார்கள்.

குழந்தையால் தனது தாயை அடையாளம் காண முடியவில்லை. எனினும், சிறிது யோசித்து பின்னர் அது தனது தாயை அடையாளம் கண்டுகொள்கிறது. தனது தாய் இதுதான் என தெரிந்தவுடன் குழந்தை அவர் மடியின் மீது ஏறிக்கொள்கிறது.

தாய்-மகனின் பாசத்தை விளக்கும் இந்த அழகான வீடியோவை மக்கள் மிகவும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

இந்த வீடியோ status.fan.tranding என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. ‘தாய்க்கு நிகர் யாரும் இல்லை’ என்று இந்த வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

‘அம்மாவுக்கும் மகனுக்கும் இடையிலான உறவு இதுதான்’ என்று இந்த வீடியோவுக்கு ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

‘மிகவும் அழகான வீடியோ’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோ இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.