arapaliswarar - 2026

அறப்பளீஸ்வர சதகம்: யாருக்கு எது நஞ்சு!

ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் இலக்கியம் கட்டுரைகள்
arapaliswarar - 2026

நன்று தீதாதல்

வான்மதியை நோக்கிடின் சோரர்கா முகருக்கு
மாறாத வல்வி டமதாம்!
மகிழ்நன் றனைக்காணில் இதமிலா விபசரிய
மா தருக் கோவி டமதாம்!
மேன்மைதரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்
மிக்கபேர்க் கதிக விடமாம்!
வித்தியா திபர்தமைக் கண்டபோ ததிலோப
வீணர்க்கெ லாம்வி டமதாம்!
ஈனம்மிகு புன்கவி வலோர்க் கதிக சபைகாணில்
ஏலாத கொடிய விடமாம்!
ஏற்றமில் லாதபடு பாவிகட்க றமென்னில்
எந்நாளும் அதிக விடமாம்!
ஆனதவ யோகியர்கள் இதயதா மரையுறையும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

கள்ளருக்கு நிலவொளி தடையாகும். காமநோய் ஆக்கம்பெற்ற தவயோகியரின் உளத்தாமரைமலரில் வாழும் பெரியோனே!
அருமை. தேவனே!, திருடருக்கும் காமநோயாளருக்கும் வானத்தில்
திங்களைப் பார்த்தால் நீங்காத கொடிய நஞ்சு ஆகும். நன்மையில்லாத
தீயொழுக்கப் பெண்டிருக்குக் கணவனைப் பார்த்தால் நஞ்சுபோல் இருக்கும்,
வெப்புநோய் மிகுந்தவர்கட்கு உயர்ந்த இனிய சுவைமிக்க கறிகளும்
மிகுந்த நஞ்சாகும், மிகுந்த ஈகைப் பண்பிலாத வீணர்கள்
யாவருக்கும் கலைவல்லோரைக் கண்டபோது நஞ்சாகும், இழிவு
மிக்க புன்கவிவாணருக்குப் பேரவையைக் கண்டாற் பொறுக்கமுடியாத தீய
நஞ்சாகும், மேன்மையில்லாத பெரும் பாவிகளுக்கு அறம் என்றால் எப்போதும் பெருநஞ்சு ஆகும்.

காதலரைப் பிரிந்தோர்கட்கே. ஆகையாற், கூடியிருப்போர்க்கு இன்பம்
ஊட்டும் நிலவு அவர்களுக்குப் பெருவெறுப்புத்தரும். கலைவாணர்க்குக்
கொடுக்கவேண்டுமே என்னும் அச்சத்தால் ஈகையிலார்க்கு வெறுப்புண்டாகும். ‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்.’

நன்னிலையில் இல்லாதார்க்கு நல்லவை தீயவையாகவே காணப்பெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.