பக்தர்களுடன் கலந்து தப்பிச் சென்ற கடத்தல்காரர்கள்!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

திருப்பதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள 60 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செம்மரங்களை வெட்டிக் கடத்தவிருந்த கடத்தல்காரர்கள், பக்தர்களோடு பக்தர்களாகக் கலந்து, தப்பி ஓடியுள்ளனர்.

திருப்பதியில் வெட்டிக்கடத்தப்பட இருந்த இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 60 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீ வெங்கடேஷ்வரா உயிரியல் பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 60 செம்மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

செம்மரங்களை வெட்டி கடத்த இருந்தவர்களை துரத்தியபோது, அவர்கள் திருப்பதி மலையில் ஏறிச்சென்று பக்தர்களுடன் கலந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.