திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம்; முடியாவிட்டால், நீட் தேர்வில் காப்பியடிக்க மாணவர்களை அனுமதிப்போம் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

திமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாத நிலையில் அமைச்சர்களாகிய நாங்கள் மாணவர்களை காப்பியடிக்க விட்டிருப்போம் என முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.என். நேரு பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்றால் நாங்கள் அமைச்சர்களாக இருந்தால் மாணவர்களை காப்பியடிக்கவாவது விடுவோம் இல்லையா? கண்டிப்பாக செய்வோம்.

பீகாரில் காப்பி அடிக்கிறீர்கள்; மத்தியப் பிரதேசத்தில் காப்பி அடிக்கிறீர்கள்; திறந்துவிட்டு எல்லாம் எழுதுகிறீர்கள்… பிறகு தமிழ்நாட்டில் நாங்கள் மட்டும் என்ன உத்தமசீலர்களா? எவ்வளவு நாளுக்கு இப்படியே இருப்பது? என்று பேசினார் கே.என். நேரு.

இது சமூக மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

One response to “திமுக., ஆட்சிக்கு வந்தால் நீட்-டாக மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம்: கே.என்.நேரு!”

  1. சரிதான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending