புதுக்கோட்டையில் வெறிச்சோடிய சாலைகள்!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
pudukkottai
pudukkottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று  முழு ஊரடங்கு,  சாலைகளும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிஇருந்தது !! 

அமல்படுத்தப்பட்டது தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறதுஇரவு  நேர ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ள அதே வேளையில், விடுமுறை தினமான  ஞாயிற்றுக்கிழமை அன்று பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அன்றைய தினம் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி     முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

pudukkottai1
pudukkottai1

புதுக்கோட்டைமாவட்டத்தில் இதன் காரணமாக  புதுக்கோட்டை  பஸ்நிலையம்   ரயில்வே ஸ்டேசன்  6 சட்டப்பேரவை தொகுதிகளின்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள  அரசு மகளிர் கல்லூரி   சாலை ,கீழராஜவீதி மேலராஜவீதி வடக்குராஜவீதி,தெற்குராஜவீதி பழைய பேருந்துருந்து நிலையம்   உள்ள    கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நகரில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை.  மளிகைக்கடைகள் மற்றும் .உணவககங்கள் டீக்கடைகளும் திறக்கப்படவில்லை.

அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்றும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அதற்கு பயந்து மக்கள் வெளியில் வரவில்லை. இதனால் சாலைகள்  வெறிச்சோடி காணப்பட்டது.    பரபரப்பாக காணப்படும் முக்கிய பகுதிகளில்  .  போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் 

செய்தியும் படங்களும்: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.