குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி இன்று பதில் 

இந்தியா சற்றுமுன்

புது தில்லி :

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில்  குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் அளித்து உரையாற்றுகிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்முதல் நாளில், இரு அவைகளும் அடங்கிய கூட்டுக்கூட்டத்தில்  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. அந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்.

அப்போது நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்கிறார். அரசின் சாதனைகளை அவர் எடுத்துரைப்பார். பின்னர்  குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இதையடுத்து பாஜக., எம்.பி.க்கள் அனைவரும் அவைக்கு தவறாமல் வரவேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.