செங்கோட்டை பிரானூர் தீப்பாச்சியம்மன் கோவில் திருவிழா: பறவைக் காவடிஎடுத்து பக்தர்கள் வழிபாடு!

சற்றுமுன்
நெல்லை மாவட்டம், செங்கோட்டை பிரானூர்- பார்டரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடந்து வரும் திருவிழாவில் தீப்பாச்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் இன்று மாலை குண்டாற்று பாலம் அருகே விரதம் இருந்த பக்தர்கள் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதனை தொடர்ந்து பக்தர்கள் சிலர் தீச்சட்டி எடுத்தனர். பின்னர் வாண வேடிக்கை, மேளதாளம் முழங்கிட பக்தர் ஒருவர் தனது உடலில் அலகு குத்தி பறவைக் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக பறவைக்காவடியில் பக்தர்களுடன் ஊர்வலமாக வலம் வந்த அவர் தீப்பாச்சியம்மன் கோவிலை வந்தடைந்தார்.

திருவிழாவை முன்னிட்டு செங்கோட்டை , பிரானூர் பார்டர், வல்லம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.