kadala paruppu Varu kadalai - 2026

இனிய மாலை.. கிரிஸ்ப்பா ஒரு வறுகடலை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kadala paruppu Varu kadalai - 2026

வறுகடலை

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – ஒரு கப்
வேர்க்கடலை – 50 கிராம்
பூண்டு – 6 பல்
மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
நெய் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடலைப்பருப்பை எட்டு மணி நேரம் ஊறவைத்து, துணியில் போட்டு நிழலில் உலர்த்தி, எண்ணெயில் பொரித்து எடுத்து வடிகட்டியில் போடவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு நசுக்கிய பூண்டு, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

இதை, பொரித்த கடலைப்பருப்புடன் சேர்க்கவும். மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.