பான்+ஆதார்.. மார்ச் 31க்குள் இணைக்காவிடில் ரூ.10000 அபராதம்!

Published:

adhar pan - 2026

மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க தவறும்பட்சத்தில் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

பான் கார்டு என்பது முக்கியமான ஆவணமாகும். வருமான வரி ரிட்டன் முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது வரை, காப்பீடு செய்ய அல்லது ஏதேனும் அரசாங்க திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள பான் கார்டு அவசியம்.

ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் பான் கார்டு அவசியம். தற்போது மொபைல் எண் மற்றும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது அவசியமாகிவிட்டது.

பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு முதலில் செப்டம்பர் 30, 2021 என நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) நிரந்தர கணக்கு எண் இந்த காலக்கெடுவை 31 மார்ச் 2022 வரை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

அதன்படி மார்ச் 31 ஆம் தேதிக்குள் உங்கள் பான் கார்டை ஆதார் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும். அப்படி இணைக்கப்படாவிட்டால், பான் கார்டு செயலற்றதாகிவிடும். அதுமட்டுமின்றி, 1,000 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

மேலும், வருமானக் கணக்கு தாக்கல் செய்யாததற்காக ஐடி சட்டத்தின் 234, F பிரிவின் கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கத் தவறினால், பான் எண்ணை வழங்க முடியாது.

அதுமட்டுமல்லாமல், வருமானத்தை தாமதமாக தாக்கல் செய்வதற்கு வட்டி விதிக்கப்படும். பிரிவு 139A இன் விதிகளுக்கு இணங்காததன் கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

சில நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதை இந்த பிரிவு கட்டாயமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது ..

www.incometaxindia.gov.in/pages/pan.aspx என்ற வருமான வரித்துறை இணையதளத்தைப் பார்வையிடவும்
Link Aadhaar என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆதார் மற்றும் பான் எண் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பவும்
பின்னர் கேப்ட்சாவை உள்ளிடவும்
பின் Link Aadhaar” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும் அதன் பிறகு உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும்.

Related articles

Recent articles

spot_img