cat 1 - 2026

பாய்ந்தோடி பாப்பாவை காத்த பூனை!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
cat 1 - 2026

வீட்டில் வளர்க்கும் பூனை மற்றும் நாய்களுக்கு வளர்ப்பவர்கள் மீது இருக்கும் கரிசனம் சொல்ல வேண்டியதில்லை.

அந்தளவுக்கு வஸூவாசமாக இருக்கும். ஆபத்தான சில நேரங்களில் அவற்றின் உயிரைக் கூட பொருட்படுத்தாது நம்மை காப்பாற்றுவதற்கு அசாத்திய முயற்சி எடுக்கும். அந்த நேரத்தில் வீட்டு விலங்குகளின் சாமார்த்தியத்தை எண்ணி, நாமே வியந்து கொள்வோம்.

இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவும் அந்த ரகமே. வீட்டில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பூனை, ஆபத்பாந்தவனாக மாறி குழந்தையை காப்பாற்றுகிறது.

அதாவது, அந்த வீடியோவில் குழந்தையும் பூனையும் இருக்கின்றனர். பூனை ஒருபுறம் விளையாடிக் கொண்டிருக்க, குழந்தையும் விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் வீட்டில் பெரியவர்கள் இருப்பது போல் தெரியவில்லை.

ஷோபா மீது அமர்ந்து கொண்டிருக்கும் குழந்தை பின்னர் அதில் இருந்து இறங்கி கீழே விளையாடுகிறது. அப்படியே தத்தி தத்திச் சென்று ஓர் இடத்திற்கு சென்று கீழே இறங்க முயற்சி செய்கிறது.

அந்த நொடியில் ஷோபா மீது இருந்த பூனை ஓடி வந்து அங்கு கீழே விழ இருந்த குழந்தையை தூக்கிப் பிடித்து தடுக்கிறது. பூனையின் இந்த செயல் காண்போரை வியக்க வைக்கிறது. டிவிட்டரில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.