images 16 1 - 2026

சமையல் எண்ணெய் விலை ஏறுமுகத்தில்..

சற்றுமுன்

உக்ரைன் – ரஷ்யா போர் சூழலால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு வை அடுத்து சமையலுக்கு பயன்படுத்தும் இறக்குமதி எண்ணெய்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது 

 இந்தியாவில் சமையலுக்கு அதிகம் பயன்படுத் தக்கூடிய சூரியகாந்தி எண்ணெயை உக்ரைன் நாடு அதிகளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது .அந்த நாட்டில் இருந்து இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல் மூலம் சூரியகாந்தி எண்ணெயை வினியோகிக்கப்படுகிறது.
உக்ரைன் – ரஷ்யா போர் சூழலால்  சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.இதுபோல் பாமாயிலும் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. 

இதனால்  போருக்கு முன் ரூ 100முதல் ரூ130 ஆக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது ரூ 200க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பாமாயில் விலையும் லிட்டருக்கு ரூ60வரை விலை உயர்ந்தது.

 இந்த சூழலில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது .

உக்ரைன் – ரஷ்யா போர் சூழலால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு வை அடுத்து சமையலுக்கு பயன்படுத்தும் இறக்குமதி எண்ணெய்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது இல்லத்தரசி கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

images 16 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.