health tips - 2026

அப்பாச்சி தீர்வு: கணைநோய், கண்கட்டி, ஜூரம், வலிப்பு, நீரழிவு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

கணை நோய் குணமாக…

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து கொடுத்து வர குழந்தைகளின் கணை நோய் குணமாகும்.

கண்கட்டி குணமாக…

திருநீற்றுப் பச்சை இலைச் சாற்றினை கண் கட்டிகள் மீது தடவி வர குணமாகும்.

ஊரில் அம்மையா?

அம்மை நோய் தொற்று வியாதி. அதனால் ஊரில் அம்மை நோய் கண்டால் உடனே ஒரு முற்றின கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு சாப்பிடவும். அதன் பிறகு அம்மைநோய் தொற்றிக் கொள்ளாது.

குழந்தையின் ஜூரமும் வலிப்பும் போக…

பொன்னாவரை விதையை அரைத்து 5 முதல் 10 கிரெய்ன் அளவு பாலில் கலந்து 1 மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு வேளை கொடுத்தால் போதும். ஜூரம் தணியும். வலிப்பு நோய் நீங்கும்.

சிறுநீரில் சர்க்கரையா?

அத்திப்பழ விதைகளை தனியாக எடுத்து உலர்த்தித் தூள் செய்து வேளைக்கு 5 கிரெய்ன் வீதம் தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரிலுள்ள சர்க்கரை அளவு தானே குறைந்து விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.