திருநெல்வேலி அருகே நிலப்பிரச்சனையில் இன்று மூவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள நாஞ்சான்குளத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதில் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக ஜேசுதாஸ் மற்றும் அழகுமுத்து குடும்பத்தினர் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், அழகுமுத்து தரப்பினர் ஜேசுராஸ் தரப்பைச்சேர்ந்த ஐந்து பேரை வெட்டியதில் பலத்த காயமடைந்தனர்.
மோதல் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
படுகாயம் அடைந்த 5 பேரையும் போலீசார் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் ஜேசுராஸ் (55)மரியதாஸ்(55) வசந்தா (45) பலியானர்.இருவர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






