Gold smuggling - 2026

இது சொட்டைய மறைக்க வைத்த விக் இல்லை.. தங்கபட்டையை மறைத்த விக்!

சற்றுமுன் இந்தியா கிரைம் நியூஸ்
Gold smuggling - 2026

அபுதாபியில் இருந்து புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்து தரையிறங்கியது.
அந்த விமானத்தில் வந்து இறங்கிய ஒருவர் சந்தேகப் படும்படி இருந்தார். அவரிடம் சொதனை செய்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது பைகள், சூட்கேஸ்கள் என எதிலும் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரது தலையில் முன்பக்க முடியின் நிறம், தன்மை வேறு மாதிரி இருந்துள்ளது பின் பக்கம் வேறு மாதிரி இருந்துள்ளது.

இதை கவனித்த போலீஸார் அது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

இதனால் அவரது தலையை தொட்டு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். திட-திரவியம் போன்று ஏதோ முடிக்கு பின்னால் இருப்பது போல தெரிந்தது. இதையடுத்து முடியை விலக்கி பார்த்தபோது அதில் செயற்கை முடி உள்ளங்கையளவு விக் போல ஒட்டப்பட்டுருந்தது.

அதனை உரித்து பார்த்தபோது உள்ளே ஒரு பாக்கெட்டில் தங்கப் பேஸ்ட் இருந்துள்ளது.

பின்னர் நடத்திய விசாரணையில் இந்த தங்கத்தை கடத்துவதற்காக தலையின் பாதியில் மொட்டையடித்து, அதில் தங்க பேஸ்ட்டை ஒட்ட வைத்து அதன் மீது விக்கை ஒட்டி ஏமாற்ற முயன்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.

இந்த தங்கத்தின் எடை 630.45 கிராம் என்றும், இந்திய மதிப்பில் சுமார் ரூ.30.55 லட்சம் மதிப்புடையது என்றும் சுங்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.