தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

Published:

corona virus
corona virus

தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் இன்று மேலும் 4329 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இன்று 2082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர்  உயிரிழந்திருக் கின்றனர்.  இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,385ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 4329 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,02,721 பேராக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் 2ஆவது நாளாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,000ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் மட்டும் இன்று 2082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் . தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 58,378ஆக அதிகரித்துள்ளது. 

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வருகிறது . சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 2247 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது 

சென்னையில் இன்று 2082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64,689ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்டவாரியாக பாதிப்பு தகவல்…

corana district wise july
corana district wise july

Related articles

Recent articles

spot_img