nilagiri4 - 2026

ஊட்டி கோடைவிழா கோத்தகிரி காய்கறி கண்காட்சியுன் துவக்கம்..

சுற்றுலா

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் கோடைவிழா
2 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

காய்கறி கண்காட்சியை நீலகிரி கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். கண்காட்சியையொட்டி பூங்காவின் நுழைவு வாயிலில் தக்காளி, வெண்டை, பாகற்காய், கேரட், முட்டைகோஸ், காலி பிளவர் உள்பட 25 வகையான காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

காய்கறி கண்காட்சியில் தோட்டக்கலை சார்பில் மீன், கிட்டார் வடிவிலான கடிகாரங்களும் செய்யப்பட்டு பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.இதுதவிர கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கத்திரிக்காய்களை கொண்டு யானையும், 2 மயில்களும், கேரட்டை கொண்டு டிராகன், முதலையும், பாகற்காய்களை கொண்டு டைனோசரும் செய்யப்பட்டுள்ளது.

முட்டைக்கோஸ், பீட்ரூட், கத்தரிக்காய் கொண்டு சேவல், கோழி, பாண்டா கரடி, பூசணிக்காயில் கங்காரு, குடை மிளகாய், வெள்ளரிக்காயை கொண்டு இரட்டை கிளி செய்யப்பட்டுள்ளது. கருணை கிழங்கு, பரங்கிக்காய், கத்தரி, பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு மீன்களும், முள்ளங்கி, கத்திரியை கொண்டு குதிரையும் பூங்காவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

கண்காட்சியில் குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் கவரும் வகையில் ஒன்றை டன் கேரட்டை கொண்டு 600 கிலோ எடையில் குட்டியுடன் கூடிய ஒட்டகசிவிங்கி மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊட்டி உதயமாகி 200 ஆண்டுகள் ஆவதையொட்டி அதனை கொண்டாடும் வகையில் பூக்களை கொண்டு ஊட்டி 200 என்ற வாசகமும் வைக்கப்பட்டுள்ளது. கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து மயில், முதலை, கிளி, கங்காரு, பாண்டா கரடி கப்பல், மீன், டோரா, போன்ற வடிவங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகம் கேரளாவில் இருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு கழித்தனர்.2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விழா தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

nilagiri4 - 2026
nilagiri3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.