nadda bjp - 2026

கேரளாவில் ஜே.பி. நட்டா..

சற்றுமுன்

கேரளாவில் நடைபெறும் இடதுசாரிகள் ஆட்சியில் முஸ்லிம் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் மையமாக கேரளம் மாறிவிட்டது என, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கோழிக்கோடில் நேற்று நடந்த பொதுகூட்டத்தில்
குற்றம்சாட்டி பேசினார்.

கேரளாவில் கோழிக்கோடில் நேற்று நடந்த பா.ஜ.க பொது கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது,

கேரளா கடவுளின் பூமி என போற்றப்பட்டது எல்லாம் பழைய கதை. பரசுராமரால் உருவாக்கப்பட்ட கேரள மாநிலம், தற்போது இடதுசாரிகள் ஆட்சியில், முஸ்லிம் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் மையமாக மாறிவிட்டது.

பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மாநிலத்தில் முஸ்லிம் மதமாற்றங்களும் அதிகரித்துள்ளன. இது பற்றி கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்களே கவலை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

nadda bjp - 2026
BJP national president J P Nadda with party leaders waves at his supporters during a public rally, in Kozhikode, Friday, May 6, 2022. Photo: PTI

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.