blood - 2026

இந்த வாரம் இரத்த மழை பெய்யும்.. வானிலை ஆராய்ச்சி மையம் அதிர்ச்சி தகவல்!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
blood - 2026

பிரித்தானியாவில் இந்த வாரம் இரத்த மழை என்னும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்வதுடன், இடி மின்னலுடன் கன மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த இரத்த மழை என்பது, அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும்போது உருவாகுவதாகும். ஆகவே, மழை பெய்யும்போது சிவப்பு நிறத்தில் நீர்த்துளிகள் விழுவதைக் காண முடியும்.

லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை தொடர்பில் இன்று காலை வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

செவ்வாயன்று பிரித்தானியர்கள் கடும் வெயிலால் தவித்த நிலையில், இப்போது திடீரென வானிலை மாறி மழை பொழியும் நிலை உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.