811012 untitled 1 1 - 2026

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்..

தமிழகம்
811012 untitled 1 1 - 2026

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடுவதற்க்கு ஏதுவாக இன்று 36-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் துவங்கி நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 35 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் 36-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. இந்த சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணை செலுத்த உள்ளவர்களும், 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள்  பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.