கள்ளக்குறிச்சி: “தப்பு பண்ணவனெல்லாம் நல்லா இருக்கான்.. இந்த முருகேசன் என்னை படுக்க கூப்பிடறான்.. நான் படுத்துக்கிட்டால் நல்லவளாம்.. இவனை பத்தி எங்கெல்லாம் நான் புகார் தந்திருக்கேன் தெரியுமா.. யாராவது என் பிரச்சனையை கேளுங்க” என்று அரசு பெண் ஊழியர் ஒருவர் சக அரசு ஊழியர் மீது கதறி அழுது புகார் சொல்லிய வீடியோ அதிர்ச்சியை தந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதி பெண் வார்டனாக உள்ளவர் லஷ்மி.. அதே துறையில் அரகண்டநல்லூர் விடுதி வார்டனாக பணியாற்றுபவர் முருகேசன். இவர் லஷ்மிக்கு 2 வருடங்களாக பாலியல் தொல்லை தந்து வருகிறதாக தெரிகிறது..
இதுகுறித்து பல இடங்களில் லஷ்மி புகார் தந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிகிறது.. இதையடுத்து லஷ்மி ஒருவீடியோ பதிவிட்ள்ளார்.. அதில் கண்ணீருடன் லஷ்மி பேசியதாவது:
“எல்லாருக்கும் வணக்கம்… கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் ஹாஸ்டல் வார்டன்.. எனக்கு கடந்த 2 வருஷமா எனக்கு முருகேசன் என்பவரால் பல தொந்தரவு அனுபவிச்சிட்டு இருக்கேன்.. என் பேரில் தேவையில்லாமல் ஏகப்பட்ட பெட்டிஷன் போட்டு என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்.. ஆனா எந்த அதிகாரியும், அவன் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல..
இன்னைக்குகூட சாராயம் அடிச்சிட்டு, மாணவிகள் முன்னாடி கேவலமா என்னை பத்தி பேசறாங்க.. புகார் தந்தேன் என் ஹாஸ்டல் ரெக்கார்ட்ஸ் எடுத்துட்டு போயிட்டாங்க… ஒரு துறையில் சாதாரண மொட்டை பெட்டிஷனுக்கு ஸ்டெப் எடுக்கிறாங்க.. ஆனா உண்மையா வேலை பார்க்கணும்னு நினைக்கறேன்.. ஏன் குறையை ஏன் கேட்க மாட்டேங்கறீங்க?
முருகேசன் என்னை படுக்க கூப்பிடறான்.. நான் படுத்துக்கிட்டால் நல்லவளாம்.. இவனை பத்தி எங்கெல்லாம் நான் புகார் தந்திருக்கேன் தெரியுமா? தேசிய மகளிர் ஆணையம், விழுப்புரம் கலெக்டர், எங்க கமிஷனர், எங்க டைரக்டர்.. எல்லார்கிட்டயும் தந்தாச்சு.. இன்னும் எங்க போயிதான் கம்ப்ளைண்ட் தரணும்? யார்தான் நியாயத்தை கேப்பீங்க? என்னால இதுக்குமேல மன உளைச்சல், டார்ச்சரை தாங்க முடியல..
யாராவது, எந்த துறையிலாவது ஒரு நல்லவங்க இந்த தமிழ்நாட்டில் இருந்தால், இதை பத்தி கேளுங்க. நான் ஒரு அரசு ஊழியர்.. நான் இந்த வீடியோவை வெளியிடலாமா? இதனால எனக்கு என்ன பிரச்சனை வரும்னு எனக்கு தெரியாது… ஆனால், நியாயமா இருக்கிறவங்க யாராவது இதை பார்த்தீங்கன்னா, எனக்கு தயவுசெய்து உதவி பண்ணுங்க..
தப்பு பண்ணவனெல்லாம் நல்லா இருக்கான்.. முருகேசன் ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே ரிடையர் ஆயிருக்கணும்.. இந்த துறையில, அரசு பணத்தை அவ்வளவு கொள்ளை அடிக்கிறான்.. நான் தனியா நின்னு போராடிட்டு இருக்கேன்.
வாக்குமூலம் எனக்கு சப்போர்ட் இல்லேன்னாலும் பரவாயில்லை.. நிம்மதியா வேலை பார்க்க விட்டால் போதும்… என் ஹாஸ்டல் பிள்ளைகள் முன்னாடியே கேவலப்படுத்தினால், அந்த பிள்ளைங்களை நான் எப்படி பாதுகாப்பேன்? நாளைக்கு நான் உயிரோடு இருப்பேனா என்னன்னு கூட தெரியாது.. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா உளுந்தூர்பேட்டையை சேர்ந்த எம்.முருகேசன்தான் காரணம்.. இதை என் வாக்குமூலமா எடுத்துக்கிட்டாலும் சரி” என்று கண்ணீருடன் கூறுகிறார்.
உண்மையிலேயே இது எது சம்பந்தமான பிரச்சனை, முருகேசன் – லஷ்மி இடையே என்ன காரணம் என்று தெரியவில்லை.. முருகேசன் மீது லஷ்மி சொல்லும் காரணங்கள் என்ன என்றும் விளங்கவில்லை.. அதே நேரம் லஷ்மியின் பதிவினை அலட்சியமாகவும் நினைத்துவிட முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போலீசார்தான் இதைபற்றி விசாரிக்க வேண்டும்.. எனினும் ஒரு அரசு பெண் ஊழியர் இப்படி கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்ச்சியாகவே உள்ளது