வேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை! குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக யார் ஒருவர் ஜாதகத்தில் தொழில் ஸ்தானாதிபதிக்கு உரியவர் யார் என தெரிந்து அவருக்குரிய தெய்வத்தை வணங்கினால் நிச்சயம் உத்யோகம் கிட்டும்.
சரி பத்தாமிடத்து அதிபர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்றால் அந்த கிரகம் வாங்கி வந்த நட்சத்திரத்தின் அதிபதி யார் என்றும் அந்த அதிபதிக்கு அதி தேவதையை வணங்கினால் உத்யோக சாத்தியம் உண்டு.
சரி… சார நட்சத்திர அதிபதியும் சரி இல்லை என்றால் அதாவது பத்தாமிடத்தில் இருக்கின்ற கிரகமும் அந்த கிரஹம் வாங்கி நட்சத்திர சாரமான கிரஹமும் சரி இல்லை என்றால் ஒரே வழி திருச்செந்தூர் சென்று முருகனை தரிசிப்பது உத்தமம்.
திருமணம் ஆணாக இருந்தால் அதாவது களத்திர ஸ்தானமாக கருதக் கூடிய ஏழாமிடம் சுபமாக இருக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் களத்திரகாரகன் எந்தக் கிரகமோ அந்தக் கிரக வாங்கி வந்த நட்சத்திரத்தின் அதிபதிக்கான அதி தேவதையை வணங்குவது சாலச் சிறந்தது.
ஏழாம் இடத்தில் நிற்கின்ற கிரகமும் சரி இல்லை வாங்கிவந்த நட்சத்திர சாரமும் சரி இல்லை என்றால் குற்றாலநாதரையும் குழல்வாய்மொழி அம்மையாரையும் வணங்கி அங்குள்ள மணக்கோலநாதரை சந்தனப்பொடி பன்னீர் கொண்டு வணங்கி வர திருமண கைகூடும்.
புத்திரப்பாக்கியம் இல்லாதவர்கள் ஜாதகத்தில் ஐந்தாமிடம் ஐந்துக்குரியவன் யார் ஐந்தாமிடத்தில் இருக்கும் கிரஹம் யார் என்று அறிந்து, அக்கிரஹத்தின் அதிபதியை வணங்குவதாலும் புத்திதிரப்பேறு கிடைக்கும். அக்கிரஹம் சரி இல்லை என்றால் கிரஹம் வாங்கி வந்த நட்சத்திரத்தின் அதிபதியின் அதிதேவதையை வணங்குவதால் புத்திரப்பேறு கிடைக்கும்
சரி… புத்திரகாரகன் குரு இருந்தால் புத்திரப்பேறு கிடைக்க அரிது என்பார்களே. ஐயம் வேண்டாம் வியாழ பகவானுடைய பவர் நமது திருச்செந்தூரில் பரிபூரனமாக உள்ளது. அங்கே கடலில் குளித்து செந்தூர் வேலவன் திருமாலின் மருமகன் வீரபாகுத் தேவனின் நண்பன் நல்லவர்களுக்கு அருள்பாலிக்கும் அரனின் (சிவன்) மகன் சக்தியின் மைந்தன் விநாயகரின் சகோதரன் தேவரின்தெய்வமானவன் செந்தூர் முருகனை வழிபட வழிபட புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது உறுதி.
- ஜோதிடர் அன்பன் அகஸ்தியா
ராஜஸ்ரீ ஜோதிடாலயம், இலத்தூர் (82201 63376)