மதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்… கவனமா குறிச்சு வெச்சிக்குங்க…!

Published:

train - 2026

மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக 05.02.2020 முதல் 04.03.2020 வரை ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

வண்டி எண் 56624 மதுரை – பழனி பயணிகள் ரயில் 12.02.2020 முதல் 29.02.2020 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் இந்த நாட்களில் பயணிகள் வசதிக்காக ஒரு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 06.30 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு பழனி சென்று சேரும்.

வண்டி எண் 56734/ 56735 மதுரை – செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 10.02.2020 முதல் 25.02.2020 வரை வியாழக்கிழமை தவிர மதுரை – விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56319/56320 நாகர்கோவில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் பயணிகள் ரயில் 05.02.2020 முதல் 25.02.2020 வரை வியாழக்கிழமை தவிர திருப்பரங்குன்றம் – திண்டுக்கல் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயில் 11.02.2020 அன்று சாத்தூர் – திண்டுக்கல் ரயில் நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் வண்டி எண் 56320 கோயம்புத்தூர் – நாகர்கோவில் பயணிகள் ரயில் பிப்ரவரி 15 முதல் 24 வரை வியாழக்கிழமைகள் தவிர மதுரை கோட்ட எல்கையில் 50 நிமிடங்கள் காலதாமதமாக இயங்கும்

மதுரையிலிருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56723 மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் 10.02.2020 முதல் 12.02.2020 வரையும் மற்றும் 02, 03.3.202 ஆகிய நாட்களிலும் மண்டபம் – ராமேஸ்வரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது அதேபோல ராமேஸ்வரத்திலிருந்து முற்பகல் 11. 15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56722 ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் 13.02.2020 முதல் 29.02.2020 வரை ஞாயிற்றுக்கிழமை தவிர பரமக்குடி – ராமேஸ்வரம் ரயில் நிலையங்களிடையேயும், 10.02.2020 முதல் 12.02.2020 வரையும் மற்றும் 02, 03.3.202 ஆகிய நாட்களிலும் மண்டபம் – ராமேஸ்வரம் ரயில் நிலையங்களிடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

5..நண்பகல் 12.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் வண்டி எண் 56721 மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் 13.02.2020 முதல் 29.02.2020 வரை ஞாயிற்றுக்கிழமை தவிர பரமக்குடி – ராமேஸ்வரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56829/56830 திருச்சி – ராமேஸ்வரம – திருச்சி பயணிகள் ரயில் 13.02.2020 முதல் 29.02.2020 வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மானாமதுரை – ராமேஸ்வரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
.

வண்டி எண் 56829/56830 திருச்சி – ராமேஸ்வரம – திருச்சி பயணிகள் ரயில் 13.02.2020 முதல் 29.02.2020 வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மானாமதுரை – ராமேஸ்வரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56822 திருநெல்வேலி/திண்டுக்கல் – மயிலாடுதுறை இணைப்பு ரயில் பிப்ரவரி 07, 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28, மார்ச் 02 மற்றும் 04 ஆகிய நாட்களில் திண்டுக்கல் – திருச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த இணைப்பு ரயில் பிப்ரவரி 13, 15, 18, 20, 22, 25, 27 மற்றும் 29 ஆகிய நாட்களில் மதுரை கோட்ட எல்கையில் 50 நிமிடங்கள் காலதாமதமாக இயங்கும்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

9.வண்டி எண் 56769/56770 பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் பிப்ரவரி 10, 11, 14, 15, 17, 18, 21, 22, 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் சாத்தூர் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும் பிப்ரவரி 12, 16, 19 மற்றும் 23 ஆகிய நாட்களில் மதுரை – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் இந்த ரயில் மதுரையில் இருந்து மாலை 6. 45 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 76840 காரைக்குடி – திருச்சி பயணிகள் ரயில் காரைக்குடியிலிருந்து 05.02.2020 முதல் 29.02.2020 வரை ஞாயிற்றுக்கிழமை தவிர காலை 09.50 மணிக்கு பதிலாக காலை 10.50 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 56826 திருநெல்வேலி – ஈரோடு பயணிகள் ரயில் பிப்ரவரி 12 முதல் 29 வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மதுரை கோட்ட எல்கையில் 115 நிமிடங்கள் கால தாமதமாக இயங்கும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Related articles

Recent articles

spot_img