petrol bomb madura - 2026

மேல அனுப்பானடியில் பெட்ரோல் குண்டு வீச்சு; இருவர் கைது!

மதுரை
petrol bomb madura - 2026

மேல அனுப்பானடி ஆர் .எஸ். எஸ். பிரமுகர் கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஆர். எஸ். எஸ். கிருஷ்ணன் வீட்டில் , வெடிகுண்டு வீசிய வழக்கில் ஏற்கனவே மதுரை சம்பட்டி புரத்தை சேர்ந்த உசேன் , நெல்பேட்டை சேர்ந்த சம்சுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், வடக்கு வாசல் மாப்பாளையத்தை சேர்ந்த அக்குபஞ்சர் கிளினிக் நடத்தி வரும் அபுதாகிர் என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளார்கள்.

தற்போது ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், தற்போதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ,சிலரை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.