உங்களையும் சிறையில் அடைக்க முடியும் என செய்தியாளரை மிரட்டிய மம்தா

இந்தியா

mamata-banerjee கோல்கத்தா: உங்களையும் சிறையில் அடைத்திருக்க முடியும் என செய்தியாளரை மிரட்டியுள்ளார் மம்தா பானர்ஜி.. நிதி மோசடி வழக்கில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆதரவாளரான தொழிலதிபர் சிவாஜி பாஞ்சா நேற்று தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அது தொடர்பாக நேற்று கோல்கத்தா விமான நிலையம் வந்திருந்த மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, செய்தியாளரை மிரட்டும் வகையில், வழக்கமான ஆவேசத்துடன், உங்களையும் சிறையில் அடைத்திருக்க முடியும். ஆனால் நல்லெண்ணம் காரணமாக அப்படிச் செய்யவில்லை. நீங்கள் என்னிடம் ஏன் இதனைக் கேட்கிறீர்கள்? தொழிலதிபர்களுக்கு எதிராக வழக்குகள் இருக்கலாம். இதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை…. என்றார். முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, வங்கதேச தலைநகர் டாக்கா சென்றிருந்தார். மம்தாவுடன், அவரின் நெருங்கிய உதவியாளரும், பிரபல தொழில் அதிபருமான சிபாஜி பன்ஜாவும் சென்றிருந்தார். இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம், விமானம் மூலம் கோல்கட்டா வந்தடைந்தார். அவருடன், பன்ஜாவும் வந்திறங்கினார். அப்போது, விமான நிலையத்தில் தயாராகக் காத்திருந்த இந்தியக் குடியுரிமைத் துறை அதிகாரிகள், பொருளாதார மோசடி வழக்கின் கீழ் பன்ஜாவை கைது செய்தனர். இந்த நிகழ்வு, விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட பன்ஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 50 ஆயிரம் ரூபாய் பிணையத் தொகை செலுத்தி ஜாமினில் வெளிவந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.