
கலைமகள் இலக்கிய மாத இதழ், செங்கோல் சிறப்பு என்ற தலைப்பிலான நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சனிக்கிழமை அன்று ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது.
கலைமகள்’ இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் எழுதிய ‘செங்கோல் சிறப்பு’ நூலை, திருவாவடுதுறை 24வது ஆதீனம் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ அம்பலவாண பரமாச்சாரியார் சுவாமிகள் வெளியீடு செய்தார். உடன், ‘கலைமகள்’ பதிப்பாளர் பி.டி.டி.ராஜன், ஆடிட்டர் ஜெ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இருந்தார்கள்.
நந்திச் செங்கோல் ஏந்தும் நடராஜர் என்ற கட்டுரையில், தென்னிந்தியாவில் கல்லால் கட்டிய திருக்கோவில்களை முதலில் அமைத்தவர்கள் சாளுக்கிய மன்னர்கள். பட்டடக்கல், வாதாபி போன்ற தலங்களில் மிகச் சிறப்பு வாய்ந்த கற்றளிகளை ஆறாம் நூற்றாண்டில் இருந்தே கட்டத் தொடங்கினர். தெய்வம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கொடிக்கம்பம் அமைந்திருக்கும். சிவபெருமானுக்கு நந்தி, மகாவிஷ்ணுவுக்கு கருடன். பிரம்மாவுக்கு அன்னம், துர்க்கைக்குச் சிங்கம், முருகனுக்கு பயில் என்றவாறு… எனக் குறிப்பிடும் இந்த நூலில், இடம் பெற்றுள்ள கட்டுரைகள் செங்கோலின் சிறப்பை எடுத்துச் சொல்லுகின்றன. நல் ஆட்சியின் அடையாளம் செங்கோல்! – என்ற கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் எழுதியுள்ள கட்டுரையில் செங்கோன்மை குறித்து தெளிவாக குறிப்பிடுகிறார்.
‘செங்கோல்’ என்பது செவ்விய கோல். அதாவது வளையாத கோல் என்று அர்த்தம்! நேர்மையான ஆட்சியைக் கொடுத்து குடிமக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாப்பது ஆட்சியாளர்கள் கடமையாகும். அரசாட்சியில் குற்றத்தையும் குணத்தையும் சீர்தூக்கி ஆராய்ந்து செம்மையாக ஆள்வதே செங்கோன்மையாகும். செங்கோல் என்பது அரச சின்னங்களில் முக்கியமாகக் கருதப்பட்ட ஒன்றாகும்.மன்னன் அரியணை ஏறும்பொழுது செங்கோலைக் கையில் தரிப்பது அரசனின் முக்கியமான அடையாளம் என்று இந்த கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
‘செங்கோல்’ என்றால் என்ன? அதை உருவாக்கியவர் யார்? அதன் முக்கியத்துவம் என்ன? அதன் தோற்றம் இவற்றைக் குறிப்பிடும் ஒரு கட்டுரையில், செங்கோலின் மகிமையை தமிழர் வரலாறு மற்றும் மரபுகள் மூலம் கண்டறிய முடியும் என்றும், ‘அதிகாரம் மற்றும் நீதி’ பிரதிநிதித்துவம் ஆகியவற்றை செங்கோல் குறிப்பிடுவதையும் ஒரு கட்டுரையில் கொடுத்துள்ளார்.
ஆதீனம் தயாரித்து வழங்கியுள்ள இந்த செங்கோல் என்பது ஐந்து அடி நீளம் கொண்டது மற்றும் உச்சியில் ஒரு நுணுக்கமான செதுக்கப்பட்ட ‘நந்தி’யைக் கொண்டுள்ளது என்ற அடையாளத் தகவலுடன் இந்த நூலில் உள்ள கட்டுரைகள் செங்கோலை குறித்து முழுமையாக புரிந்து கொள்ள உதவுகிறது.
கலைமகள் இதழ் பதிப்பாளர் பிடிடி ராஜன் எழுதியுள்ள முன்னுரையில், இந்த நூலின் பின்னணியைக் குறித்துள்ளார். அதில், கலைமகள் மாத இதழ் “செங்கோல் சிறப்பு” என்னும் இந்த நூலை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது.
பாரத தேசம் பாரினில் உயர்ந்த தேசம். நீதி நெறி தவறாது குடியரசாகத் திகழ்கின்ற தேசம். பாரதம் சுதந்திரம் பெற்ற போது திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் பிரதமர் நேரு அவர்களிடம் (15.08.1947) வழங்கப்பட்டது.
அந்தச் செங்கோலை புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் இப்போது (28.05.2023) பாரத பிரதமர் மோடி அவர்கள் இந்திய பாரம்பரியத்தை ஒட்டிய வைபவங்களுடன் நிறுவியுள்ளார். இந்த வைபவத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். செங்கோல் சிறப்பு என்னும் இந்தச் சிறு நூலை கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் தயாரித்துள்ளார்.
இந்த நூலை கலைமகள் சார்பாக திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் திருவடிகளில் சமர்ப்பித்து மகிழ்கிறோம்…. என்று குறிப்பிட்டுள்ளார்.
கலைமகள் வாழ்த்துகிறது – என்ற முகப்புரையில், எங்களது இலைகளின் முதன்மை ஆசிரியராக இருந்த தமிழ்த்தாத்தா உசேர். அவர்களும் அவரின் குருநாதர் மகாவில னோட்சிசுந்தரம் பிள்ளை அவர்களும் தமிழ்த் தாத்தா அவர்களின் வஜ் அவர்களும் திருவாவடுதுறை ஆதினத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள்.
நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் வழங்கி அருளிய திருவாவடுதுறை ஆதினத்தை பரத தேசத்தின் பிரதம பந்தி விமானத்தில் அழைத்து மரியாதை செய்திருக்கிறார்கள்.
செங்கோலை (சுறந்திரம் அடைந்த 76வது ஆண்டில் தேசத்தின் பிரதம மந்திரியிடம் திருவாவடுதுறை ஆதினம் வழங்கி ஆகியுள்ளார்கள். வாலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை தரக்கூடியதாகும்.
செங்கோலை வடிவமைத்து (1947 ஆம் ஆண்டில் உம் குடும்பத்தினரையும் அழைத்து இருப்பது சிறப்பு. தமிழ முறையாக வளர்த்து வரும் தமிழ்நாட்டு ஆதீனங்களை அழைத்து இருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். எங்கள் கலைமகள் இலக்கிய மாத இதழோடு தொடர்புடைய திருவாவடுதுறை ஆதினத்தை வணங்கி மகிழ்கிறோம். எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்… என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செங்கோல் என்றால் என்ன? செங்கோல்கள் பலவிதம், செங்கோல் விவகாரத்தில் அரசியல் கூடாது என்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுரை, 1947 இல் டைம் பத்திரிகை செய்தியில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்ற தகவல் இவற்றுடன் இந்த நூல் செங்கோல் குறித்த தகவல்கள் அடங்கிய பெட்டகமாகத் திகழ்கிறது.