IMG 20230427 WA0098 - 2026

மல்யுத்த வீராங்கனை களுக்கு ஆதரவாக போராட்டம்..

சற்றுமுன்
IMG 20230427 WA0098 - 2026
#image_title

விருதுநகரில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக இன்று
அனைத்து சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

இந்தியாவின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண்சிங். இவர் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராவார். இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்த பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தலைநகர் தில்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.

ஆனால், பாஜக அரசு, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தில்லியில் போராடி வரும் வீராங்களைகளுக்கு ஆதரவாகவும், பாஜக எம்.பி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்து சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.லட்சுமி தலைமையேற்றார். துவக்கி வைத்து விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.சுந்தரபாண்டியன் பேசினார். முடிவில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.முருகன் கண்டன உரையாற்றினார்.

மேலும் இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கிஷோர், வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி பாண்டீஸ்வரன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.