andal kaisiki ekadasi 108 vastram - 2026

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில்: ‘108’ போர்வை சாற்றும் வைபவம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை விழாக்கள் விசேஷங்கள்
andal kaisiki ekadasi 108 vastram - 2026
#image_title

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், ‘108’ போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது.

கார்த்திகை கௌசீக ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ பூ சமேத வடமஹா தாமஸ்வாமி (மற்றும்) ஸ்ரீ கோதா சமேத ராஜகோபால ஸ்வாமிக்கும் ஆழ்வார் ஆச்சரியர்களுக்கும் 108 போர்வை வைபவம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில், பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் குளிர்காலம் தொடங்கியதை அறிவிக்கும் வகையில், கார்த்திகை மாத கைசிக ஏகாதசி திருநாள் கொண்டாடப்பட்டது.

கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு ‘108’ பட்டு புடவைகள் அணிவிக்கும் போர்வை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் கோவிலில் உள்ள வடபத்ரசயனர் சந்நிதி மண்டபத்தில் ஸ்ரீதேவி – பூதேவி சமேத பெரியபெருமாள், ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியாழ்வார் உள்ளிட்ட 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர்.

சுவாமிகள் அனைவருக்கும் 108 போர்வைகள் சாற்றப்பட்டது. இதைனையடுத்து அரையர் சேவையும், வேதபிரான் பட்டர் கைசிக புராணம் வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.