indian 2 kamal and shankar - 2026

யுடியூப்பில் அதிகப் பார்வைகள் பெற்ற இரு தமிழ் சினிமா பாடல்கள்!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
indian 2 kamal and shankar - 2026

யூ-டியூப் இசைத் தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT – இந்தியன் 2 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம் வெளியானது.

பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது. நடிகர் விஜயும் பவதாரணியும் பாடிய இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடும் இதமான பாடல் என்கிறார்கள் இசை ரசிகர்கள்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து calendar song என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் உலக அழகி டெமி இதில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இந்த இரண்டு பாடல்களும் யூ டியூப் அகில இந்திய இசை வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்த இரண்டு பாடலையும் கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.