நேபாளத்தில் காய்கறி வியாபாரிகள் போராட்டம்: வரி உயர்வால் பாதிப்பாம்!

உலகம் சற்றுமுன்

nepal vegetables vendors - 2026

காட்மாண்டு:

நேபாளத்தில் காய்கறி வியாபாரிகள் சாலையில் காய்கறிகளைக் கொட்டி போராட்டம் நடத்தினர். அதற்குக் காரணம், வரி விதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்து விட்டதுதானாம்!

இந்தியாவில் இருந்துதான் பெரும்பாலான காய்கறிகளும் நேபாளத்துக்கு இறக்குமதி ஆகின்றன. ஆனால், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் காய்கறிகளுக்கு பிர்குஞ்ச் கஸ்டம்ஸ் அலுவலகத்தில் ஏகத்துக்கும் வரி விதிக்கிறார்களாம். இதனால் கடுப்பான காய்கறி வியாபாரிகள், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாலையில் கொட்டி, நேபாளத்தின் பிர்குஞ்ச் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.