thiruvellarai pundariga perumal temple pavithrotsavam - 2026

திருவெள்ளறையில் சிறப்பாக நடைபெற்ற ஜேஷ்டாபிஷேகம்

விழாக்கள் விசேஷங்கள் ஆன்மிகச் செய்திகள் திருச்சி
thiruvellarai pundariga perumal temple pavithrotsavam - 2026

108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் உப கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலின் ஜேஸ்டாபிஷேகம் நடைபெற்றது.

ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை 5ம் தேதி வட திருகாவிரியிலிருந்து ( கொள்ளிடம் ஆறு) தங்கம், வெள்ளிக் குடங்களில் புனித நீர் சுமார் 12 கிமீ எடுத்து செல்லப்பட்டது.

நொச்சியம் பகுதி காவிரிக் கரையில் இருந்து காவிரி புனித தீர்த்தம் எடுத்து வந்து, மண்ணச்சநல்லூர் வழியாக வெள்ளிக் குடத்தை வழியில் எங்கும் கீழே வைக்காமலும் , நிற்காமல் ஓடிக்கொண்டே, குடங்களை மாற்றி மாற்றி சுமந்து வந்து, காலை 9.00 மணி அளவில் திருவெள்ளறையை தீர்த்தம் அடைந்தது.

அங்கிருந்து ஆண்டாள் யானை மீது தங்கக் குடத்தில் புனித தீர்த்தம் எடுத்துச் செல்லப்பட்டு, மங்கள இசையுடன் புண்டரீகாட்சப் பெருமாள் சன்னதி சென்றடைந்தது.

பின்னர் ஜேஸ்டாஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.