modiji speech at gangaikonda chozhapuram - 2026

ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இந்தியா Featured அரசியல் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modiji speech at gangaikonda chozhapuram - 2026
  • தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
  • ஒவ்வொருவரும் கைத்தறி தயாரிப்புகளை வாங்கி, நாட்டின் நெசவாளர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.
  • ஒவ்வொரு இந்தியரும் குறைந்தபட்சம் ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்.
  • இதன் மூலம் இந்திய கைவினை கலைஞர்களின் திறமையும், கைவினை திறனும் உலக அளவில் அங்கீகாரம் பெறும்
  • – பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.

நண்பர்களே, ஆகஸ்ட் 7 1905ஆம் ஆண்டு, இந்த நாளை நாம் மறக்கக்கூடாது.  ஆகஸ்ட் மாதம் 1905ஆம் ஆண்டு நாடு விடுதலை அடைய சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது.  தற்சார்பு பாரதத்துக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.  ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாட்டுமக்கள் ஒரு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 

மக்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.   கடந்த வாரம் நீங்கள் அனைவரும், நண்பர்கள் தினத்தைக் கொண்டாடினீர்கள்.   இன்று வேண்டுகோள் விடுக்கிறேன், ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி, கைத்தறி நாள் ஆகும்.  நாம், அதே அளவு உற்சாகம் ஊக்கத்துடன், கைத்தறி நாளைக் கொண்டாட வேண்டும். 

கைத்தறி நாளைக் கொண்டாடுவது என்றால், ஒவ்வொரு ஏழைக் குடும்பமும், நெசவாளர் குடும்பமும், தங்கள் கைகளாலே தங்கள் சின்னச்சின்ன வீடுகளில் இருக்கும் தறிகளிலே, நெசவு செய்கிறார்கள்.  புதியபுதிய வகைகளில் நெய்கிறார்கள் பாருங்கள் இங்கே என்ன இல்லை!! 

மேலும், நீங்களும் கூட, இந்த முறையிலே, ஒரு கைத்தறி வகையைப் பயன்படுத்தி, ஜி ஆர் டபுள்யூ எம் வீடியோவை உருவாக்கி, கண்டிப்பாக, உலகின் முன்பாக உங்கள் கருத்தை முன்வைக்கலாமே.  கைத்தறி விஷயத்தில் கருத்தூக்கம் அளிக்கலாமே!! 

நம்முடைய பணி பாரதத்தைத் தற்சார்பு உடையதாக ஆக்குதல்.  அது வாயிலாக நமது இந்தச் சின்னச்சின்ன ஏழைக் குடும்பங்களையும் கூட,  பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையச் செய்தல்.   வாருங்கள், நாமே கூட, கைத்தறி ஆடைகள், சிலவற்றையாவது வாங்குவோமே!! 

அதை ஒரு வீடியோவாக ஏற்படுத்துவோம்.  இதனை அனைத்து இடங்களிலும் பரப்புரை செய்வோம்.   இதன் வாயிலாக, நமது நெசவாளர் சகோதர சகோதரிகளின் திறமைகள் பற்றி, உலகம் தெரிந்து கொள்ளட்டும். 

வாருங்கள், ஆகஸ்ட் 7, கைத்தறி நாள்.  பலப்பல நல்வாழ்த்துக்கள். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.