srivilliputhur dwajarohan - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை
srivilliputhur dwajarohan - 2026

ஸ்ரீ பெரியாழ்வாரும், ஸ்ரீ ஆண்டாளும் மங்களாசாசனம் செய்து ஈடுபட்ட ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபெருங் கோவிலுடையானின் புரட்டாசி திருவோண பிரம்மோத்ஸவம் ஆவணி மாதம் 29-ம் தேதி இன்று (15-09-2026) செவ்வாய்கிழமை சுவாதி நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்த்ர முறைப்படி துவஜாரோஹணம்
முதல் திருநாள் இன்றிலிருந்து புரட்டாசி பிரமோற்சவம் திருவிழா தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை கோயிலில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு விசேஷ திருமஞ்சன பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

பின்னர் புதிய கொடி பட்டம் மாட வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, காலை வேதபாராயண முறையில் கொடியேற்றம் நடந்தது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் திரளான, பக்தர்கள் பங்கேற்றனர்.

12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் தினமும் காலையில் சுவாமி மண்டபம் எழுந்தருளல், இரவு வீதியுலா நடக்கிறது. செப்.23 காலை 7:05 மணிக்கு செப்பு தேரோட்டம் நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.