ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் பணமில்லை…. ஊழியர்களுக்கும் தேவஸ்தான பணியாளர்கள், சிப்பந்திகளுக்கும் சம்பளம் கொடுப்பதற்கு கூட பணம் இல்லை… திருமலா திருப்பதி தேவஸ்தானம் கூறும் கூற்று இது!
உலகிலேயே செல்வச் செழிப்பு மிகுந்த தெய்வம். ஒரு நாளைக்கு ரூ 2 கோடிக்கு குறையாமல் நன்கொடை வந்து சேருகிற கோவில். அதுவும் உண்டியல் ஆதாயம் மட்டுமே அத்தனை. அதற்கும் மேல் வரும் விலை மதிப்பில்லாத நன்கொடைகள், காணிக்கைகள்… கணக்கே கிடையாது.
ஆனால் இப்போது அங்குள்ள பணியாளர்களுக்கும் அதிகாரிகள், தேவஸ்தான சிப்பந்திகளுக்கும் சம்பளம் கொடுப்பதற்குக் கூட பணம் இல்லையாம். திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறுகின்ற வார்த்தைகள் இவை.
லாக்டௌன் காரணத்தால் 45 நாட்களாக திருமலைக்கு பக்தர்கள் வருவது நிறுத்தப்பட்டுள்ளது. நன்கொடைகள் இல்லாமல் போய் விட்டதனால் சம்பளம் கொடுப்பதற்கு இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக திருமலா திருப்பதி அதிகாரிகள் கூறுகிறார்கள்.
லாக்டௌன் காரணமாக 400 கோடி ரூ வருமானத்தை இழந்து விட்டோம் என்றும் இப்போது தினப்படி செலவுகளை சமாளிக்கவே சிரமப்படுகிறோம் என்றும் கூறுகிறார்கள். இந்த பிரச்னைக்கு தீர்வாக என்ன செய்யலாம் என்று முயற்சித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.
ஆனால் டிடிடி.,யிடம் 8 டன் தங்கம் உள்ளது. 14 ஆயிரம் கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் உள்ளது. அந்தப் பணம் , அந்த தங்கம் முதலியவற்றை தொடாமல் பிரச்சனையை தீர்ப்பதற்கு முயற்சித்து வருவதாக டிடிடி அதிகாரிகள் கூறுகிறார்கள்.
யாரு வெச்ச கண்ணோ… செல்வம் கொழிக்கும் ஏழுமலையான் கோயிலே இந்த லாக்டவுனில் திணறுகிறதாமே!
ஆனால் இதன் பின்னணியில் பல்வேறு யூகங்களை பக்தர்கள் முன்வைக்கின்றனர். கோவிலை மட்டுமல்ல கோவிலிலுள்ள லிங்கத்தையும் சேர்த்து முழுங்கிடுவான் னு ஒரு பழமொழி உண்டு. இத்தனை நாள் உண்டியலைத்தான் கண் வைத்திருந்தார்கள், இப்போது கோவிலையே ஆட்டய போட்டுட்டாங்க போல இருக்கே என்று கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தானம் ஆந்திர அரசுக்கு வருடத்துக்கு ரூ. 2.50 கோடியை அளிக்கிறது. அது தற்போது ரூ.50 கோடியாக அதிகரித்திருக்கிறது. நிதித் தள்ளாட்டத்தில் ஆந்திர மாநில அரசு இருப்பதால், திருப்பதி கோவில் பணம் ரூ.50 கோடியை தற்போது கொடுப்பதாக தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி கூறியுள்ளார்.
ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டே கையே என்று கிராமப் புறப் பழமொழி இருப்பது போல், தற்போது திருப்பதி பெருமாளை ஆட்டையப் போட, சம்பளம் கொடுக்கவே பணமில்லை திணறுகிறோமென்று ஒரு வசனத்தை உலவ விட்டு, பின்புறம் வழியாக பெருமாளுக்கான பணம் வேறு வகைகளில் அரசுக்குச் செல்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் ஆந்திர மாநிலத்தில்!