
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே இயங்கும் திருவனந்தபுரம் சென்ட்ரல் -கொல்லம்-செங்கோட்டை-ராஜபாளையம்-தாம்பரம், திருநெல்வேலி தாம்பரம் உட்பட சில சிறப்பு ரயில்கள் சேவை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் போடிநாயக்கனூர் ஸ்பெஷல்
வழி : விழுப்புரம் மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் திருச்சி மதுரை தேனி
திருநெல்வேலி தாம்பரம் ஸ்பெஷல்
வழி : விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி விருத்தாச்சலம் விழுப்புரம் செங்கல்பட்டு திருவனந்தபுரம் தாம்பரம் ஸ்பெஷல்
வழி :: கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி விருதுநகர் மதுரை விருத்தாச்சலம்
சென்னை எழும்பூர் கன்னியாகுமரி சிறப்பு
வழி : செங்கல்பட்டு விழுப்புரம் விருதாச்சலம் திருச்சி மதுரை விருதுநகர் திருநெல்வேலி
சென்னை எழும்பூர் கொல்லம் ஸ்பெஷல்
வழி : காட்பாடி சேலம் போத்தனூர் பாலக்காடு
ஆகிய சிறப்பு ரயில்களின் சேவைகள் மேலும் சில வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் செங்கோட்டை தாம்பரம் சிறப்பு ரயில் பயணிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் இந்த ரயிலை வாரம் இருமுறை ரயிலாக்கி சபரிமலை மண்டல மகரவிளக்கு சீசன் முடியும் வரை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர் மேலும் துவங்க உள்ள சபரிமலை சீசனை முன்னிட்டு செங்கோட்டை புனலூர் வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி விடுகின்றனர்


