
சென்னையிலிருந்து சொந்த கிராமங்களுக்கு திரும்பும் தென் மாவட்ட மக்களால் தங்கள் கிராமங்களில் கொரோனா பரவி விடும் என்ற அச்சத்தால் கிராம மக்கள் பலர் தங்கள் கிராமங்களுக்கு வரும் சாலைகளை அடைத்து வருகின்றனர்
நாளுக்கு நாள் சென்னையில் தீவிரமாகும் கொரோனாவால் சென்னையில் வசித்து வரும் தென் மாவட்ட மக்கள் முழு ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி வருகின்றனர் . இதனால் தென் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.
தங்கள் கிராமங்களில் கரோனா பரவுவதை தடுப்பதற்காக பிரதான சாலைகளில் தடுப்புகளை அமைத்து கிராமங்களை தனிமைப் படுத்தி வருகின்றனர் தென்மாவட்ட மக்கள்
இதற்கு ஒருபடி மேலாகச் சென்று முக்கிய சாலை வழியே மணலைக் கொட்டி தடுப்பு ஏற்படுத்தி அதிர்ச்சி அளிக்கின்றனர் கிராமங்களில்!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட எல்கைகள் (தூத்துக்குடி-எட்டையபரம் to அருப்புக்கோட்டை-மதுரை நெடுஞ்சாலை)அயன் ராசா பட்டி, சென்னமரெட்டிபட்டி, மணியக்காரன்பட்டி, கம்பத்துப்பட்டி, இனாம் அருணாசலபுரம் என திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்ட பல கிராம எல்கை வழிகள் அடைக்கப்பட்டுள்ளன.