police vehicle
police vehicle

இ பாஸ் இல்லாமல் தனது சொந்த வாகனத்தில் சென்னையிலிருந்து ஆட்களை அழைத்து வந்த சென்னை ஆயுதப்படை காவலரின் கார் பறிமுதல்-துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் காவல்துறை பரிந்துரை செய்யப் பட்டுள்ளது…

வெளியூரிலிருந்து வரும் வாகனங்களை கண்காணிப்பதற்காக விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சத்திரரெட்டியாபட்டி சோதனை சாவடியில் போலிஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தனியார் வாகனம் ஒன்று வந்துள்ளது.

police vehicle
police vehicle

வாகனத்தை நிறுத்திய போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது சென்னை ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் பாரத் ராஜ் என்பவர் உரிய இ பாஸ் இல்லாமல் காவல் ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்தி சென்னையில் உள்ள நபர்களை அழைத்து வருவதை கடந்த ஒரு மாதமாக வாடிக்கையாக கொண்டுள்ளது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் காவல்நிலையத்தில் அளித்த புகாரினை தொடர்ந்து காவலர் பாரத் ராஜ்ஜை பிடித்து விசாரணை நடத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன் அவருடைய காரை பறிமுதல் செய்த அவர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

  • ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending