
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா பனையூரை சேர்ந்த சோனை என்பவருக்கு சொந்தமான மூன்று வீடுகளை உறவினர்களுக்கு பிரித்து கொடுக்க பட்டா வாங்க விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்த நிலையில், ஒரு வீட்டிற்கு 3000 ரூபாய் என மூன்று வீட்டிற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய 9 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பனையூர் கிராம நிர்வாக அலுவலர் சத்தியஜோதி மற்றும் உதவியாளர் காந்தி கேட்டுள்ளனர்.
எனவே இதுகுறித்து சோனை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் வி.ஏ.ஓ அலுவலகத்தில் ரசாயனம் தடவப்பட்ட லஞ்ச பணத்தை பெற்ற சத்யஜோதி மற்றும் உதவியாளர் காந்தி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.
இந்நிலையில் பெண் வி.ஏ.ஓ லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியுள்ளார்.