kanda sashti in madurai murugan temples - 2026

மதுரை கோயில்களில் கந்த சஷ்டி விழா, முருகன் திருக்கல்யாணம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
kanda sashti in madurai murugan temples - 2026

மதுரை கோயில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு, கோயில்களில் அன்னப் பாவாடை அபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை ஆவின் சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயத்தில், கந்தசஷ்டியை முன்னிட்டு, தினசரி வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயில் அர்ச்சகர் ஈஸ்வர பட்டர், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளை செய்து பிரசாதங்களை வழங்கினார்.

இதேபோல, மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் சித்திவிநாயகர் ஆலயத்தில், முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் கந்த சஷ்டி அபிஷேகம் முருகனுக்கு தினசரி நடைபெற்றது. திங்கள்கிழமை காலை. பாலமுருகனுக்கு அன்னப் பாவடை நெய்வேத்திய பூஜை நடைபெற்றது. கவுன்சிலர் வள்ளிமயில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி ராஜா, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Posts by ரவிச்சந்திரன், மதுரை: