
மதுரை கோட்ட ரயில்வே பகுதியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தீய வசதிகள் ரயில்வே நிர்வாகம் செய்து தர உள்ளது. தானியங்கி தண்ணீர் விநியோக எந்திரம், ஜிகர்தண்டா கடை வசதிகள் மதுரை திருநெல்வேலி புதுக்கோட்டை விருதுநகர் ராஜபாளையம்` புனலூர் மற்றும் கொட்டாரக்கரை உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் இரயில் நிலையத்தில் அமைக்க ஒப்பந்தம் வெளியீடப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகளுக்கு புதிய வசதிகள் தயாராகி வருகின்றன.
பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் பின்வருவனவற்றை நிறுவுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை அழைத்துள்ளது. ஜிகர்தண்டா ஸ்டால் ராமேஸ்வரம் ராமநாதபுரம் ராஜபாளையம் புனலூர் மற்றும் கொட்டாரக்கரை உட்பட 13 ரயில் நிலையங்களில் நிறுவுவதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
தானியங்கி தண்ணீர் வழங்கும் இயந்திரம் ராஜபாளையம் திருநெல்வேலி திருச்செந்தூர் விருதுநகர் புனலூர் உட்பட முக்கிய ரயில் நிலையத்தில் நிறுவுவதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வர்த்தகர்கள் இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கலாம்.
இந்தத் திட்டங்கள் தமிழகத்தில் மதுரை ராமநாதபுரம் ராமேஸ்வரம் பாதுகாக்கும் திருச்செந்தூர் திருநெல்வேலி கேரளத்தில் புனலூர் மற்றும் கொட்டாரக்கரை ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு மிகவும் வசதியான பயண அனுபவத்தை வழங்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


