இன்போசிஸ் இயக்குனர் பொறுப்பில் இருந்து ரவி வேங்கடேசன் ராஜினாமா

பொது தகவல்கள் வணிகம்

ravi venkatesan infosys - 2026

புதுதில்லி: இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து ரவி வேங்கடேசன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இன்போசிஸ் நிறுவனம், வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள செய்தியிலும், அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலும் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில், இயக்குநர் ரவி வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய வாய்ப்புகளுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் … என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுவனத்தின் இணைத் தலைவராக வெங்கடேசனை இன்போசிஸ் நியமித்தது.

இவர் ஏப்ரல் 2011 முதல் இன்போசிஸ் போர்டில் இருந்தார். அதற்கு முன்னர் 2004ல் இருந்து அவர் மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் தலைவராக இருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.