சென்னை: தலைமறைவாக உள்ள பாஜக., நிர்வாகி எஸ்.வி.சேகர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எஸ்.வி.சேகர் மேல் நடவடிக்கை எடுக்குமாறு கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ”எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். இந்தப் புகார் பாஜக., ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணையில் உள்ளது.
எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். குழுவின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, மோடிக்கு ராகுல் சிம்ம சொப்பனமாக இருப்பதாகக் கூறும் திருநாவுக்கரசர் தூக்கத்தில் உள்ளார் என்றும், கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு எந்த உதவியும்செய்ய வில்லை என்றும் கூறிய தமிழிசை, ஸ்டெர்லைட் ஆலையை மூட உச்ச நீதிமன்றத்திற்குதான் அதிகாரம் உள்ளது என்று கூறினார்.