ரூ.80ஐத் தொடுகிறது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை!

இந்தியா சற்றுமுன் வணிகம்

cars petrol - 2026

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.13 காசு எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.32 காசு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மே 20 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் 7வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே சர்வதேச சந்தையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதன் பின்னர் கடந்த 7 நாட்களாக விலை உயர்த்தப் பட்டு வருகிறது.

கடந்த வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 70 காசு, டீசல் விலை ஒரு ரூபாய் 76 காசு என அதிகரித்துள்ளது. இன்று காலையும் தொடர்ந்து பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 காசு என விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 28 காசு உயர்ந்து ரூ.71.32 காசுக்கு விற்பனையாகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.