snake
snake

பொதுவாக வீட்டு பகுதிகளில் பாம்பு உள்ளிட்ட வன விலங்குகள் நுழைந்துவிட்டால் அதை பிடிக்க பொதுமக்கள் வனத்துறையினர் அல்லது தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிப்பார்கள்.

அதுவே வீட்டிற்கு பாம்பு புகுந்துவிட்டது என்றால் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பாம்பு பிடிக்கும் நபருக்கும் சில முறை மக்கள் தகவல் தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில் பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் பாம்பு ஒன்றை பிடிக்க போன இடத்தில் செய்த காரீயம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “பாம்பை அதன் வாலை வைத்து எடைப்போடக் கூடாது” எனப் பதிவிட்டுள்ளார்.

snake 1
snake 1

அந்த பதிவில் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பாம்பு பிடிக்கும் நபர் முதலில் தன்வசம் இருக்கும் பொருளை வைத்து பாம்பை வெளியே இழுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அதன்பின்னர் அவர் பாம்பின் வாலை பார்த்து அது சிறிய பாம்பு என்று முடிவு செய்து அந்த பாம்பை கையில் பிடிக்க முயற்சி செய்துள்ளார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இறுதியில் அந்த பாம்பு முழுவதும் வெளியே வந்தவுடன் இவ்வளவு பெரிய பாம்பா என்று ஆச்சரியத்தில் ஒரு நிமிடம் அப்படியே பயந்து போகும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவை தற்போது வரை 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending