boiled oil
boiled oil

நாமக்கலில் குடும்ப தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் நகர் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் தங்கராஜ். தையல் தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி.

இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். செல்வராணி அதே பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான தங்கராஜ் குடித்து விட்டு மதுபோதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த தங்கராஜ், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வராணி, பலகாரம் சுடுவதற்காக சூடுசெய்து வைத்திருந்த கொதிக்கும் எண்ணெய்யை அவர் தலையின் மீது கொட்டியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த தங்கராஜை, அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து, நாமக்கல் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவி செல்வராணியை கைது செய்தனர். குடும்ப தகராறில் கணவரின் மீது கொதிக்கு எண்ணெய்யை உற்றி மனைவி கொலை செய்தது நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending