நாங்க நினைச்சா சி.எம்.மையே போட்டுத் தள்ளுவோம்!: ராக்கெட் ராஜா ஆதரவாளரின் பகீர் மிரட்டல் ஆடியோ!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் நெல்லை

rocket raja nellai - 2026

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.க்கு வாட்-சப் ஆடியோ முலமாக ரௌடி ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துதுள்ளனர். இது குறித்த ஆடியோ பதிவு ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியாா் சொகுசு விடுதியில் தங்கியிருந்த  ரவுடி ராக்கெட் ராஜாவை போலீசார் கைது செய்தனர். நெல்லையில் பேராசிரியர் ஒருவரின் கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 ஆம் தேதி ராக்கெட் ராஜவை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதில் நெல்லையில் ஒரு பேருந்தை தீ வைத்து கொளுத்தப்  பட்டது.

பேருந்தை கொளுத்தியதில் இருந்து, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தொடா்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனை அடுத்து அம்மாவட்டம் முழுவதும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று வரை 35 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

தொடர் கைதுகளினால் ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளா் ஒருவா் மிகவும் ஆபாசமாக மிரட்டல் விடுத்து ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார்.

அந்த வாட்சப் ஆடியோ பதிவில் “நாங்கள் இதுவரை எத்தனை போலீசை போட்டுருக்கோம் தெரியுமா உங்களுக்கு? நாங்கள் நினைத்தால் எந்தப் போலீசையும் போட்டு தள்ளுவோம், எஸ்.பி அருண் சக்தி குமாரையும் போட்டுத் தள்ளுவோம்…  ஏன் நாங்க நினைச்சா சி.எம்-மைக் கூட போட்டு தள்ளுவோம்”. என மிரட்டும் தோரணையில் பேசியுள்ளனர். இந்த ஆடியோவை வெளியிட்டவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.